சென்னை,மார்ச் 18- தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், தில்லியில் இருந்து சென்னை திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.