tamilnadu

img

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை, ஏப்.19- சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பத்திரிகை யாளர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பிரபல நாளிதழ் செய்தியாளர் ஒருவருக்கும்.  தொலைக்காட்சி உதவி ஆசிரியர்  ஒருவருக்கும் ஞாயிறன்று (ஏப்.19) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளிதழின் செய்தியாளர் அரசு ராஜீவ்காந்தி  பொதுமருத்துவமனையிலும், தொலைக்காட்சி உதவி ஆசிரியர் ஸ்டான்லி அரசு பொதுமருத்துவ மனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஏற்கெனவே தஞ்சையை சேர்ந்த செய்தி யாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு  அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.