மதுரை, ஜூலை 10- சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெய ராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகி யோர் காவல்துறையினரால் கொல்லப் பட்டது தொடர்பான வழக்கின் ஆவணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்திற்கு ஆவ ணங்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து விசாரணை யை தொடங்குவதற்காக தில்லியில் இருந்து விஜயகுமார் சுக்லா தலைமை யிலான ஏழு பேர் கொண்ட சி.பி.ஐ. குழு வெள்ளிக்கிழமை மதுரை வந்து சேர்ந்தது. அவர்கள் மதுரையிலிருந்து கார் மூலமாக தூத்துக்குடி செல்ல உள்ளனர். சி.பி.ஐ. அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உள்ளதாக சி.பி. சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இடங்களான சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆகிய வற்றை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்ட பிறகு விசாரணையை தொடர்ந்து நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.