மதுரை:
சாத்தான்குளம் காவல் நிலைய காவல்துறையினரால் கடந்த ஜூன் 19-ஆம் தேதிகைது செய்யப்பட்ட செல்போன் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் காவல்துறையின் சித்திரவதையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்குகாவல்நிலைய ஆய்வாளர் சுதேசன் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இந்த பிரச்சினையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பத்து பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது தில்லி சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் வியாழன் மாலை மூன்றுமணிக்கு சிபிஐ அதிகாரிகள் இரண்டு பேர்கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில் பட்டி கிளைச் சிறை அதிகாரி சங்கர் காவல்நிலையத்தில் அளித்த புகார் மனு மற்றும்கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், நீதித்துறை நடுவர் விசாரணை வேண்டி அளித்த ஆவணங்கள், முதல்தகவல் அறிக்கை ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூராய் வின்போது பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோரிடமும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசனிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை துணை இயக்குநர் பொன் இசக்கி, துணை இயக்குநரின் உதவியாளர் முத்துவிநாயகம், அரசு மருத்துவமனை செவிலியர் வனஜா ஆகியோரிடமும் சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை வியாழன் ஆறு மணியை கடந்தும் நீடித்தது.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கோரிய வழக்கில்சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீதர் முன் ஜாமீன் மனுவை வியாழனன்று விசாரித்த நீதிபதி பாரதிதாசன் சாத்தான்குளம் படுகொலை வழக்கு குறித்துசிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யஉத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப் டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.