சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலான காரியமாக உள்ளது. கடந்த சில கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
தினமும் சராசரியாக 50-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் 690 பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 738 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.