துபாய்:
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளி பைசல் பரீத் துபாயில் கைது செய்யப்பட்டார்.மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழனன்று பைசலை துபாய் உளவுத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளனர். பைசல் பரீத் செய்தது கொடிய குற்றச்செயல் என யுஏஇ மதிப்பீடு செய்துள்ளது. இது தங்க கடத்தல் வழக்கில் தீர்மானகரமான கைது என கருதப்படுகிறது. ஏற்கனவே, தங்க கடத்தலுடன் தொடர்புபடுத்தி பைசலின் பெயர் வெளியானதும் அதில் வெளியான புகைப்படம் தன்னுடையது அல்ல எனவும் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் பைசல் ஊடகங்கள் முன்பு கூறினார். மீடியா ஒன் போன்ற சில ஊடகங்கள் இவர் நிரபராதி என செய்தி வெளியிட்டன. ஆனால் அதன்பிறகு பைசல் பரீத் இந்த வழக்கிற்கு உட்பட்டவர் என்று என்ஐஏ உறுதிப்படுத்தியது.அதைத் தொடர்ந்து பைசல் தலைமறைவானார். இதற்கிடையில், இந்தியா இவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயண விலக்கும் ஏற்படுத்தியது. இது அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வேறு நாடுகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான ஏற்பாடாகும். என்ஐஏ கேட்டுக் கொண்டதற்கு ஏற்பகைது செய்யப்பட்ட அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.