tamilnadu

img

குஜராத்தில் வராக்கடன் 70 சதவிகிதம் அதிகரிப்பு!

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், கடந்த3 ஆண்டுகளில், வங்கிகளின் வராக்கடன் 70 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. குஜராத் மாநில வங்கியாளர்கள் வெளியிட்ட அறிக்கை மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது.கடந்த 2017-ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-ஆவது காலாண்டில் ஒட்டுமொத்த வராக்கடன் ரூ. 34 ஆயிரத்து 563 கோடியாக இருந்தது. இது 2018-இன் மூன்றாவது காலாண்டில் ரூ. 38 ஆயிரத்து 520 கோடியாக அதிகரித்துள்ளது. ஓராண்டில் மட்டும் 11.45 சதவிகிதம் வராக்கடன் அதிகரித்துள்ளது.

இதையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்டால், 2015 மூன்றாவது காலாண்டில் ரூ. 22 ஆயிரத்து 659 கோடியாகவும், 2016-இல் ரூ. 30 ஆயிரத்து 698 கோடியாகவும் வராக்கடன் இருந்துள்ளது. ஜவுளித்துறையில் முன்னணி மாநிலமான குஜராத், பணமதிப்பு நீக்கத்தால் கடுமையான பாதிக்கப்பட்டது. சிறு, குறு உற்பத்தியாளர்கள், குறித்த நேரத்தில் ஆர்டரை முடிக்கமுடியாமல் தொழிலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். அதன் பாதிப்பே, தற்போது வராக்கடனிலும் எதிரொலித்துள்ளது.