tamilnadu

img

நேர்மையாக இருந்ததற்கு தண்டனையா? என் கணவருக்கு நீதி கிடைக்க ஆதரவுக்கரம் நீட்டுங்கள்...

அகமதபாத்:
28 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், குஜராத்தின் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு, ஜாம் நகர் நீதிமன்றம், சில நாட்களுக்கு முன்பு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
சஞ்சீவ் பட், ஜாம் நகர் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய காலத்தில், கைதிஒருவர் காவல்நிலையத்தில் இறந்து போனார். அது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது;இந்த வழக்கை திடீரென 28 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் தூசுதட்டிய குஜராத் பாஜக அரசு, சஞ்சீவ் பட்டை, கடந்த ஆண்டு அதிரடியாக கைது செய்தது.இந்த வழக்கில் முடிவில்தான், சஞ்சீவ்
பட்-டிற்கு ஜாம் நகர் நீதிமன்றம், தற்போதுஆயுள் தண்டனை விதித்துள்ளது.

சஞ்சீவ் பட் உண்மையிலேயே குற்றவாளிதானா? நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா,தவறா? என்பது ஒருபுறமிருந்தாலும், சஞ்சீவ் பட் மீதான குற்றச்சாட்டை, 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தோண்டியெடுத்து விசாரணை நடத்தியதிலும், அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புக்காட்டி, வழக்குநடத்தியதிலும், உள்நோக்கம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏனெனில், குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் மீது நடத் தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், அன்றைய முதல்வர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கும் பங்கு இருந்தது என்று துணிச்சலுடன் சாட்சி சொன்னவர், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்.குஜராத்தில் நடக்கும் வன்முறைகளை, கண்டுகொள்ளாமல் இருக்குமாறு அப்போதைய முதலமைச்சரான நரேந்திர மோடி, காவல்துறை அதிகாரிகளாகிய தங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக சிறப்புப் புலனாய்வுக் குழு, நானாவதி கமிஷன் ஆகிய அமைப்புக்களிடம் மட்டுமன்றி, உச்ச நீதிமன்றத்திலும்சஞ்சீவ் பட் சாட்சி கூறினார்.

அப்போதே சஞ்சீவ் பட் கட்டம் கட்டப்பட்டார். 2014-இல் மத்தியிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னணியில், 2015-ஆம்ஆண்டு, சஞ்சீவ் பட்டின் ஐ.பி.எஸ். பதவி பறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2018-ஆம் ஆண்டு சஞ்சீவ் பட், விசாரணைக் கைதி மரண வழக்கில், குஜராத் போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டுள்ளார்.எனவே, மோடி - அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சாட்சி சொன்னதாலேயே, சஞ்சீவ் பட் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சஞ்சீவ் பட்-டின் மனைவி ஸ்வேதாவும் இதையே கூறி கண்ணீர் விட்டுள்ளார். தனது கணவருக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதி கிடைக்க, நாட்டு மக்கள் உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

“மக்களுக்காக நேர்மையான முறையில் உழைத்த அதிகாரி ஒருவர், தான் செய்யாத குற்றத்திற்காக தற்போது தண்டிக்கப்பட்டு உள்ளார். பழிவாங்கும் அரசுக்கு எதிராக, எனது கணவர் தனது
நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். ஆனால், தற்போது தண்டிக் கப்பட்டுள்ளார். இறுதிமூச்சு உள்ளவரை, நீதிக்கான போராட்டத்தை நாங்கள் நடத்துவோம்” என்று கூறியுள்ளார்.
“ஆயினும், இந்த போராட்டத்தை நாங்கள் தனியாக நடத்த வேண்டுமா? அல்லதுஉங்களுக்காக (நாட்டு மக்களுக்காக) பாடுபட்ட அதிகாரிக்காக உங்களின் ஆதரவுக்கரமும் நீளுமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும்ஸ்வேதா தெரிவித்துள்ளார்.தனது கணவர் விஷயத்தில், ஐபிஎஸ்அதிகாரிகள் சங்கம்கூட ஆதரவாக இல்லை என்றும் ஸ்வேதா வருத்தப்பட்டுள்ளார்.