குஜராத்தில் 10 மாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பல கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.
குஜராத் மாநிலம் சூரத்தில் ரகுவீர் வணிக வளாகம் இயங்கி வந்தது. இங்கு 10 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். முதல் தளத்தில் இருந்த கடை ஒன்றில் தீ பற்றியுள்ளது, பின்னர் அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியது. இந்த தீவிபத்தில் கட்டிடத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் இதே கட்டிடத்தின் 4-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் சேதம் விளைவித்தது குறிப்பிடத்தக்கது