தோல்கா:
குஜராத் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற தோல்கா சட்டமன்ற தொகுதி தேர்தல் செல்லாது என்று குஜராத் மாநிலஉயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் அத்தொகுதியில் வெற்றிபெற்று சட்ட அமைச்சராக உள்ள பூபேந்திரா சிங்கின் பதவி கேள்விக்குறியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், தோல்கா மற்றும் பேத்புரா உள்பட8 தொகுதிகளில் 2 ஆயிரத்திற் கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே பாஜக வென்றது.குறிப்பாக, தோல்கா தொகுதியில் 327 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பூபேந்திரா சிங், காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து இருந்தார். அப்போதே அவர், தேர்தல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து தோல்காவில் பாஜக-வின் வெற்றியை எதிர்த்து,காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள குஜராத்உயர் நீதிமன்றம், முறைகேட்டை உறுதிப்படுத்தி தோல்கா தொகுதிதேர்தலை ரத்து செய்துள்ளது.