tamilnadu

img

உலக தடகள சாம்பியன்ஷிப் முதலிடத்தில் அமெரிக்கா

ஒலிம்பிக் தொடருக்கு அடுத்த மிகப் பெரிய தடகள தொடராகக் கருதப்படு வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடராகும். இந்த தொடரின் 17-வது சீசன் கத்தார் தலைநகர் தோஹாவில் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கியது.   மொத்தம் 209 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் அமெரிக்கா 8 தங்கம், 8 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் முதலிடத்தில் கம்பீரமாக நிற்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீனா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என  மொத்தம் 8 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. தடகளத்தின் சொர்க்க பூமியான ஜமைக்கா 2 தங்கம், 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.     இந்த தொடரில் இந்தியா இன்னும் பதக்க பட்டியலில் இடம்பெறவில்லை. பார்ம் பிரச்சனையால் இந்திய வீரர் - வீராங்கனை கள் சொதப்பி வருகின்றனர்.  உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நிறைவடைய இன்னும் 3 நாட்கள் மீதம் உள்ள நிலையில், பதக்க பட்டியலில் இடம்பெறாமல் இருக்கும் இந்திய வீரர் - வீராங்கனைகளின் சொதப்ப லான செயல்பாடு தடகள ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

       
  தங்கம் வெள்ளி வெண்கலம் 
        அமெரிக்கா                        8        8           2
சீனா                                      2       3           3
ஜமைக்கா            2       2            -
கென்யா            2        -            2
எத்தியோப்பியா            1        2            -