tamilnadu

img

இன்டர்கான்டினன்டல் கால்பந்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இன்டர்கான்டினன்டல் கால்பந்து தொடரின் (இரண்டாவது சீசன்) கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - சிரியா அணிகள் மோதின.  இந்த தொடரில் தஜிகிஸ்தான் மற்றும் வட கொரியாவிடம் தோற்றதால் இந்தியா தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறிய நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி யோடு தான் விடைபெறுவோம் என்று அடம்பிடித்த இந்திய வீரர் கள் தொடக்கம் முதலே சிரியாவிற்கு தாக்குதல் தொடுத்தனர்.  51-வது நிமிடத்தில் இந்திய வீரர் நரேந்தர் கேலாட் சிரியாவின் தாக்குதலைத் தடுத்து கோலடித்தார். 78-வது நிமிடத்தில் சிரியாவின் கேப்டன் பிராஸ் பதிலடி கொடுக்க ஆட்டம் சூடுபிடித்தது. இறுதி நிமிடம் வரை இரு அணிகளும் கோலடிக்க பலமுறை முயன்றும் பலனில்லை. இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. வெற்றி பெற முடியவில்லையென்றாலும் தோற்காமல் தொடரிலிருந்து விடைபெற்ற இந்திய அணியை ரசிகர்கள் பாராட்டினர்.