tamilnadu

img

இறுதிப்போட்டியில் தோல்வி

ஐரோப்பா கண்டத்தில் முன்னணி கிளப் கால்பந்து தொடரான பிரெஞ்சு கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாரீஸ் செயிண்ட் ஜெர்மன் அணியும், ரேன்னஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பி.எஸ்.ஜி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.2-வது பாதியில் ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்த ரேன்னஸ் 2 கோல்களை அடித்தது.கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் 2-2 கோல்கள் என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.பெனால்டி ஷூட் அவுட்டில் ரேன்னஸ் அணி 6-5 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.இரண்டாம் இடம் பிடித்தோ ருக்கான பதக்கத்தை பெற்றுக்கொண்டு பி.எஸ்.ஜி அணி வீரர்கள் சோகமாக திரும்பிக் கொண்டிருந்தனர்.கேலரி பகுதியில் வீரர்கள் வரும் வழியே நின்று கொண்டிருந்த ரசிகர் ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். வரிசையில் வந்த நெய்மாரையும் அந்த ரசிகர் வீடியோ எடுக்க முயன்றார். திடீரென அந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு அவரின் முகத்தில் நெய்மார் குத்துவிட்டார்.ரசிகர் சுதாரித்துக்கொண்டதால் பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.