கோபி, செப். 24- கோபிசெட்டிபாளையம் அருகே இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை கோபி காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜய குமார் (35). இவர் போர்வெல் வண்டி ஓட்டுநராக பணி யாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கோபிசெட்டிபாளை யம் பேருந்து நிறுத்தம் அருகில் விஜயகுமார் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோபி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் கோபி காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோரின் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர். இதில் குடிபோதையில் விஜயகுமார் அப்பகுதியைச் சேர்ந்த மணிமோகன் என்பவரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால் ஆத்திரமடைந்த மணி மோகன் மற்றும் அவரது உறவினர்கள் விஜயகுமாரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதன்பின் உயிரிழந்த விஜயகுமாரின் வாயில் பூச்சிமருந்தை ஊற்றி தற்கொலையாக சித்தரிக்கும் வகையில் பேருந்து நிலை யம் அருகில் உடலை வீசி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிமோகன், அவரது மகன் விக்னேஸ் வர், சேகர், சோமசுந்தரம், பூபதிராஜா, சதீஸ்குமார், நாக ராஜ் ஆகிய 7 பேரின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்னர், இவர்களையும், கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து 7 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.