ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் மாடுகளைக் கடத்தியதாக கூறி, பாபுலால் பில் என்ற25 வயது இளைஞரை, பசு குண்டர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் அச்சல்பூரை சேர்ந்தவர் பாபு லால் பில் (25). இவரதுநண்பர் பிந்து. 2 பேரும் மாடுகளை வேனில்ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானுக்கு சென்றுகொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், சித்தர்கர் மாவட்டத்தில் பெகுன் என்ற இடத்திற்கு சென்றபோது, அங்கே ஒரு கும்பல் இவர்களை திடீரென வழிமறித்து, மாடுகளை கடத்திச் செல்கிறீர்களா..? என்று கேட்டுக்கொண்டே சரமாரியாக தாக்கியுள்ளது.இதுதொடர்பான தகவல் போலீசாருக்கு கிடைத்து, அவர்கள் அங்கு சென்றபோது, பசு குண்டர்கள், இளைஞர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்த ஆவணங்களையும் செல்போன்களையும் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
இதனிடையே, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வழியிலேயே பாபு லால்பில் இறந்துள்ளார். பிந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார்.இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல், பேலுகான் என்பவரும், 2018-இல் ரக்பார் கான் என்பவரும் இதேபோல பசுமாடுகளை வாங்கிக் கொண்டு சென்றபோது பசு குண்டர்களால் அடித்துக்கொல்லப்பட்டனர். தற்போது பசு குண் டர்களின் கொலைவெறிக்கு பாபுலால் உயிரும் பறிபோயுள்ளது.