கோபி, ஆக. 1- ஈரோடுமாவட்டம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனவாய்க்கால்க ளுக்கு முதல்போக சாகுபடிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகி யோர் தண்ணீரைத் திறந்து வைத்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகர் அணை யின் மூலம் பாசன வாய்க்கால்களுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண் டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் பவானிசாகர் அணையிலி ருந்து கொடிவேரி தடுப்பணை மூலம் தடப் பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இருபாசன வாய்க்கால்களுக்கு முதல்போக சாகுபடிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற் றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் இணைந்து சனி யன்று தண்ணீரைத் திறந்து வைத்தனர். இது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 812 மில்லியன் கனஅடி நீர் திறக் கப்படும். இதனால், கோபிசெட்டிபாளை யம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலு காக்களில் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுவதால் விவ சாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.