tamilnadu

img

ரூ.5.90 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - இருவர் கைது

கோபி, ஜூலை 4- கர்நாடகாவில் இருந்து பண்ணாரி சோத னைச்சாவடி வழியாக தமிழகத்திற்குள் கடத்த முயன்ற ரூ.5.90 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. தமிழக-கர்நாடக எல்லையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் சோதனைச்சாவடி அமைந் துள்ளது. இச்சோதனைச் சாவடியில் காவல் துறையினர் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், சனியன்று கர்நாடக மாநி லத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வேனை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது வேனில் 8 மூட்டை புகையிலை, 80 பெட்டி பான்மசாலா பாக்கெட்டுகள் மற்றும் 60 பெட்டி புகையிலைப் பொருட்கள் என ரூ.5.90 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப் பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. இது கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்த முயன்றது தெரியவந் தது.  இதையடுத்து வேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் வேனை ஓட்டி வந்த திருவண் ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகு தியைச் சேர்ந்த சுரேஷ், திருச்சி மாவட் டம், உன்னியூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்வா ணன் ஆகிய இருவரையும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏற் கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காய்கறி பாரம் ஏற்றிய லாரியில் போதைப் பொருட்கள் மறைத்து வைத்து கடத்திச் சென்றபோது பண்ணாரி சோதனைச் சாவ டியில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.