அவிநாசி, ஆக. 23 - குன்னத்தூரில் கள்ள நோட்டு மாற்றிய இருவரை போலீசார் வெள்ளியன்று கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர், பெரு மாள் கோயில் வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் செல்வி (45).
இவரது கடைக்கு வெள்ளியன்று வந்த இரு நபர் கள் 500 ரூபாய் நோட்டு கொடுத்து 50 ரூபாய்க்கு மளிகைப் பொருளையும் மீதித் தொகை ரூ.450ம் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அவர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டில் சந்தேக மடைந்த செல்வி, உடனடியாத குன்னத் தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத் ததன் அடிப்படையில் போலீசார் அந்நபர் களை கோபி சாலை குறிச்சி சோதனைச் சாவ டியில் பிடித்தனர். விசாரணையில், அவர் கள் மதுரை புதுமேட்டுத் தெருவை சேர்ந்த சதீஷ் (22), அலங்காநல்லூரைச் சேர்ந்த புகழ் (20) என்பதும் தெரியவந்தது.
அதோடு அவர்கள் மேலும் ரூ.28 ஆயிரத்திற்கு 500 கள்ள நோட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து குன்னத்தூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், புகழ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.