திருப்பூர், ஆக. 10- திருப்பூரில் தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், சந்திராபுரத்தைச் சேர்ந்த வர் ராஜ்குமார் (38), விருது நகரைச் சேர்ந்த ஜெகன் கார்த்திக் (35) ஆகிய இருவ ரும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளை சம்ப வங்களில் ஈடுபட்டு வந்த னர். இவர்கள் மீது தலா 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமை திக்கு பங்கம் ஏற்படுத்து வகையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரையும் குண்டர் தடுப் புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் கார்த்தி கேயன் உத்தரவிட்டார். இதன்படி இருவரும் குண் டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.