ஈரோடு, ஆக. 4- தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக சமூகவலைதளங்களில் வரும் தகவல் தவறானது எனவும், ஓரிரு நாட்களில் முழு விபரங்களும் தெரிவிக்கப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகத் தலைவர் மருத்துவர் ராஜா தெரி வித்துள்ளார். இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றை எதிர்த்து அனை வரும் போராடி வரும் சூழ்நிலையில், மருத்துவர்கள் பாகுபாடில்லாமல் சேவை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்துள்ளதாக சமூகவலை தளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. இது குறித்து இன்னும் இரு தினங்களில் தெளிவான விவ ரங்கள் வெளியிடப்படும் என்றார். மேலும், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித் துள்ள போதும் அலட்சியமாக இருக்கக்கூடாது. தனி யார் மருத்துவமனைகளுக்கு தடுப்பு மருந்துகள் தடை யின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா சிகிச்சைக்காக அதிகமாக கட்டணம் வசூ லிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வரவேற்கக் கூடிய ஒன்று, இதேபோல் தனியார் மையங்களிலும் இந்த சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.