ஈரோடு, ஜூலை 2- உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிஎஸ் 3 இன் ஜினை மோசடியாக வாகனங்களுக்கு அசோக் லைலாண்ட் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் மாற்றி வருவதாக ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா பகுதியில் ஏர்ஜோன் என்ற ஆம்னி பேருந்துகள் வைத்திருப்பவர் பி.கே.வெங்கடேசன். இவர் தனது நிறுவனத்தில் 5 ஆண்டு களுக்கு ஒருமுறை வாகனங்களில் என்ஜினைக் மாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோவையில் உள்ள டிவிஎஸ் நிறுவனத் திற்கு எஞ்சின் மாற்றுவதற்காக கொடுத்துள்ளார். என்ஜின் மாற்றுவதற்காக 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு பிஎஸ் 3 என்ஜின் மாற்றி கொடுத்துள்ளனர்.எஞ்சின் மாற்றப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் வழங்கப் படவில்லை. தடை செய்யப்பட்ட என்ஜினை மாற்றியதால் விபத்து காலங்களில் காப்பீடு பெற முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே இதனை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷி டம் மனு அளித்துள்ளார்.