tamilnadu

img

ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு, ஜூன் 15- சம்பளம் வழங்காதைக் கண் டித்து ஈரோட்டில் தனியார் நிறு வன ஒப்பந்தத்தொழிலாளர்கள் ரயில் பெட்டிகளில் தண்ணீர் நிரப்ப மறுத்து போராட்டத்தில் ஈடு பட்டனர். ஆந்திர மாநிலம், செகந்திரா பாத்தைச் சேர்ந்த கிங் குரூப் என்ற நிறுவனம் ரயில் பெட்டிகளில் தண் ணீர் நிரப்புவது மற்றும் பெட்டி களைச் சுத்தம் செய்யும் பணிக்கு ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து ஒப்பந்தம் பெற்றுள்ளது. இப்பணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்ப 21 பேரும், சுத்தம் செய்ய ஏழு பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதந்தோறும் ஏழு முதல் 10ஆம் தேதிக்குள் சம்பளத்தைத் தனியார் நிறுவனம் கொடுக்க வேண்டும். ஆனால் ரயில்வேயில் இருந்து தொகை வரவில்லை எனக்கூறி தொழிலாளர்களுக்கு மாதச் சம்ப ளம் போட கால தாமதம் செய் கின்றனர். இந்நிலையில் தொழிலாளர் கள் அனைவரும் வெள்ளியன்று காலை பணி செய்ய மறுத்து உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது, கடந்த மாதச் சம்ப ளம் இதுவரை போடவில்லை. தொழிலாளர்களாகிய நாங்கள் எவ்வாறு குடும்பம் நடத்த முடி யும். மாதந்தோறும் மிகவும் கால தாமதமாகவே சம்பளம் கிடைக் கிறது. தினமும் ரூ.487 வழங்க வேண்டும். ஆனால் ரூ.330 மட் டுமே கொடுக்கின்றனர்.  இஎஸ்ஐ கிடையாது. பிஎப் நம்பர் கொடுக்க வில்லை. சம்பளம் குறித்து கேட் டால் மீண்டும் வேலை தரமாட் டோம் என்று கூறி மிரட்டுகின்ற னர். மேலும் சிலர் மட்டுமே ஈரோட் டில் இருந்து வருகின்றனர். பலர் பிற ஊர்களில் இருந்து வருகின்ற னர். பணியின் போது அடிபடும் தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது. எங்க ளுக்கு உரிய சம்பளத்தை உடனடி யாக வழங்க வேண்டும். இல்லை யெனில்கோரிக்கை நிறைவேறும் வரை ரயில்களில் தண்ணீர் நிரப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக தொழிலாளர்கள் பிரச்சனையால் ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட் டது.