tamilnadu

img

கோபி அருகே சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் பலி

கோபி, மே 25-கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சென்ற கார் மரத்தில் மோதிய விபத்தில் அவர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளசிறுவலூர் காவல் நிலையத்தில்சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக ஜேம்ஸ் ராபட் என்பவர் பணியாற்றி வந்தார். வெள்ளியன்று தனது காரில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக காவல் துறை நண்பர்கள் குழுவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற இளைஞரும் ரோந்துப் பணிக்குச் சென்றார். இந்நிலையில் இரவு முழுவதும் சிறுவலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்ற ஜேம்ஸ் ராபட் கொளப்பளூர் பகுதியில் அதிகாலை வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். பின்னர் கெட்டிச்செவியூர் பகுதிக்குச் சென்று அங்குள்ள இரவு ரோந்துப்பணி புத்தகத்தில் கையொப்பம் செலுத்தி விட்டுகாரில் சிறுவலூர் காவல்நிலையம்திரும்பினார். வரும் வழியில்ரேஞ்சர்நூற்பாலை அருகில்வரும் போதுஜேம்ஸ் ராபட்ஓட்டி வந்தகார் திடீரெனநிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சிறப்புஉதவி ஆய்வாளர் ஜேம்ஸ் ராபட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்தகாவல்துறை நண்பர்கார்த்திகேயனை படுகாயங்களுடன் அவ்வழியாகச் சென்ற வாகனஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கோபிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிறுவலூர் காவல் நிலையத்திற்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த சிறுவலூர் காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த சிறப்புஉதவி ஆய்வாளர் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கோபிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இரவு ரோந்துப்பணியின் போது சிறப்பு உதவிஆய்வாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல் துறையினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கடந்த 15 நாட்களாக வாக்கு எண்ணும் மையத்தில் இரவு பணியில் ஈடுபட்டு வீடுதிரும்பிய தலைமை காவலர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பணி, பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய ரோந்துப்பணி, வாகன தணிக்கை,குற்ற சம்பவங்களில் ஈடுபட்டகுற்றவாளிகளைக் கண்டுபிடித்தல் என கடந்த இரு மாதங்களாக காவல் துறையினர் ஓய்வின்றி பணியாற்றி வருவதால் இவ்வாறுஅடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. மேலும் பணியில் தொய்வு ஏற்பட்டாலோ, காவல் துறையினர் மீதுபுகார் வந்தாலோ, பத்திரிகைகளில் காவலர்கள் பற்றி  செய்திவெளி வந்தாலோ எவ்வித காரணமும் கேட்காமல்  மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் கடுமையாகத் தண்டிப்பதாகவும், இதனால் ஈரோடு மாவட்ட காவல் துறையினர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுடன் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.