ஈரோடு, ஆக. 11- சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவுக்கு (EIA-2020) எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் சார்பில் ஆன் லைன் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலா ளர் ஆர்.ரகுராமன் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளதாவது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு(EIA) என்பது விளையும் நிலப்பயன்பாட்டு மாற்றம், நிலத் தடி நீர் உறிஞ்சுதல், மரங்களை அழித்தல், மாசு, கழிவுகள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றம் சம்மந்த மான நடைமுறைகளைக் கண்கா ணிக்கவும், நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கவும் முக்கியமானதா கும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்வது என்பது மக்களின் வாழ் வாதாரத்தையும், சுற்றுச்சூழலை யும் நேரடியாகத் தாக்குவதே ஆகும்.
இந்நிலையில், இச்சட்டத் திருத்த வரைவு அறிவிப்பின் முறை, வடிவம் மற்றும் செயல்பாட்டுத் தன்மை காரணமாக நேரடியாக பாதிப்புக்குள்ளாகும் மக்களின் கருத்துக்களை அறிய போதிய அவ காசம் அளிப்பது அரசின் கடமை யாகும். ஆனால், தற்போதைய மருத் துவ அவசரநிலையும், மக்கள் நட மாட்டக் கட்டுப்பாடுகளும், தனிம னித இடைவெளியும், அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களும் தடைகளாக உள்ளன. இந்தக் கட் டுப்பாடுகள் காரணமாக வரைவு அறிவிக்கை தொலைதூர மக்களி டம் சென்றடையவில்லை.
எனவே, திட்டமிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் திருத்த சட்டவ ரைவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கொரோனா தொற் றின் தாக்கம் ஒரு முடிவுக்கு வந்து மக்களின் வாழ்க்கை இயல்புநி லைக்கு திரும்பிய பின்பு இச்சட்ட வரைவை மீண்டும் மக்களின் கருத் தறிய வைக்கவேண்டும். மக்களி டையே பரவலான வாதங்களுக்கு வைத்த பின்பே இச்சட்ட வரை வும், திருத்தங்களும் நடைமுறைப் படுத்த வாக்குறுதியை அரசு அளிக்க வேண்டும்.
மக்களின் கருத்துக்களை யும், ஏற்பவர்கள் மற்றும் மறுப்பவர் களின் கருத்துக்களையும் திருத்தங் களை சட்டமாக்குவதற்கு முன் பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும். மேலும், திட்டமிடப்பட்டுள்ள இத்திருத்தச் சட்ட 2020 வரைவு நாட்டு மக்களின் பங்களிப்பு இல்லா மலும், ரியோ உடன்படிக்கை 10 வது பிரிவை மீறாத வகையிலும் இயற்கை நீதியை நிலைநாட்ட ஈரோடு மாவட்டம் முழுவதும் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆன் லைனில் பிரச்சார இயக்கம் தொடங் கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொ டர்பாக நடவடிக்கை எடுக்க சுற்றுச் சூழல் செயலாளருக்கு ஆன்லை னில் மனு அனுப்பும் இயக்கமும் நடைபெறும் என அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.