tamilnadu

img

தண்டனை காலம் முடிந்த முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்க சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்

ஈரோடு,அக்.3- தண்டனை காலம் முடிந்த முஸ்லிம் சிறைவாசிகளை விடு தலை செய்ய வேண்டும் என தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தியுள்ளது. காந்தி 150 ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மற்றும் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் ஈரோடு மாவட்ட மாநாடு ஈரோடு பெரியார் மன்றத்தில் புதனன்று  நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு  சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள் கே.எஸ்.இஷரத்தலி, டி.விஜய குமார், பி.சுந்தரராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் முகமது அப்துல் காதர் வரவேற்றார். தமிழக மக் கள் ஒற்றுமை மேடையின் நிர்வாகி கே.துரைராஜ் மாநாட்டை துவக்கி பேசினார். மாநில பொதுச் செயலா ளர் ப.மாரிமுத்து, ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் மக்கள் ஜி.ராஜன், ஈரோடு மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர் மத்திய சங்கத்தின் தலைவர் ஈ.பி.ரவி, மூத்த பத்திரிகை யாளர் தா.சண்முகம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். பழனிச்சாமி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே.நடராஜன்,  முன்னாள் வட்டாட்சியர் க.ராஜ் குமார், நிர்வாகிகள் ஜாபர் சாதிக், என்.ஹைதர் அலி, எஸ்.ஜாபர் சாதிக் தாவூதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில் தமிழக சிறை களில் நீண்ட காலங்களாக முஸ் லிம் சிறைவாசிகள் தண்டனை காலம் முடிந்த பிறகும் விடுதலை செய்யாமல் இருந்து வருகிறார்கள். அவர்களை உடனடியாக விடு தலை செய்ய வேண்டும். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தின்போது தோண்டப்பட்ட சாலைகளை சீர மைத்து கொடுக்க வேண்டும். தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வின் மாநில பொதுச்செய லாளர் ப.மாரிமுத்துவை காவல் துறை எந்த அறிவிப்பும் இன்றி  அக்.1 ஆம் தேதியன்று வீட்டில் நுழைந்து காவல்நிலையத்திற்கு  அழைத்து சென்றுள்ளனர். மேலும், அவர் மீது பொய் வழக்கு போட  முயற்சித்துள்ளனர். இது கண்டிக் கதக்கது. தொடர்ந்து நடத்தப் படும் இந்த ஜனநாயக தாக்கு தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தொடர்வது என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
இதையடுத்து, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நல குழுவின் புதிய மாவட்ட செயலாளராக ப.மாரி முத்து. மாவட்ட தலைவராக கே. எஸ்.இஷரத்தலி, மாவட்ட பொரு ளாளராக நடராஜன் உள்ளிட் டோர் புதியநிர்வாகிகளாக தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.லட்சு மணன் நிறைவு உரையாற்றினார்.