tamilnadu

img

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 18- காலதாமதமின்றி ஊதியம் வழங்கக் கோரி ஈரோட்டில் அஞ்சல் ஊழியர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஊதியம், ஓய்வூதியம் உரிய தேதியில் அஞ்சலக வங்கிக்கணக்கில் செலுத்துவதில் காலதாமதமாவதைக் கண்டித்து அஞ்சல் ஊழியர் சங்கங்கள் மற்றும் அஞ்சல் ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு சங்கம் சார்பில் ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழி யர் சங்க நிர்வாகி மோகன் தலைமை  வகித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் கார்த்தி கேயன், சாமிநாதன், சிவகுமார் மற்றும் ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு சங்கம் சார்பில் ஆர்.சுப்பிரமணியன், என்.ராம சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.