ஈரோடு:
தமிழ்நாடு கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மக்கள் பார்வைக்காக அதன் அருகிலே கண்காட்சிக்கு வைக்கப்படும் என்று ஈரோட்டில் செய்தித்துறைஅமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள நொய்யல் நதி கரையோரம் அமைந்துள்ள கொடுமணலில் நடைபெற்று முடிந்த அகழ்வாராய்ச்சி பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இந்த அகழ்வாராய்ச்சியில் 2500ஆண்டுகளுக்கும் முந்தைய கிணறு, உருக்காலை, வர்த்தகம் செய்த இடங்கள் மற்றும் சமாதி ஆகிய இடங்களை பார்வையிட்ட அமைச்சர், பின்னர் அங்கு கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்ளிடம் அமைச்சர் கூறுகையில், கொடுமணல் அகழாய்விற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அகழாய்வில் கிடைக்கின்ற பொருட்கள் மக்கள் அதிகம் கூடுகின்ற இடத்தில் கண்காட்சி அமைக்கப்படும் என்றார்.