கோபி, ஆக. 31- ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை உள்ளிட்ட ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு சாகுபடிப் பணிகள் முழு வீச் சில் நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டா ரத்தில், சவண்டப்பூர் கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணியை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்திற்கு 3.44 லட்சம் மெ.டன் உணவு தானிய உற்பத்தி இலக்காக நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 3.23 லட்சம் மெ.டன் உணவு தானிய உற்பத்தி சாதனை அடையப்பட்டது. மாவட்டத்திற்கு 84 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கோபி, தூக்க நாயக்கன்பாளையம் வட்டாரங்களில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட முழுவதும் 1250 ஏக்கர் இயந்திரம் மூலம் நடவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் ஆள் பற்றாக்குறை மற்றும் அதிக மகசூல் கிடைக்க வேண்டி இயந்திர நடவு முறையை ஊக்குவித்திட தமிழக அரசு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.2000 பின்னேற்பு மானியம் வழங்க உத்த ரவிட்டுள்ளது. மேலும் உழவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும், வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளை ஈர்க்கவும் நெல் வரப்பில் உளுந்து பயிரிட வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து மேலும் கள ஆய்வு செய்து மக சூல் விபரங்கள் ஒப்புநோக்கப்பட்டு அறுவடைக்குப் பின்பு விவரங்கள் அரசுக்கு அளிக்கப்படும் எனவும் தெரி வித்தார்.