tamilnadu

img

தனியார் பள்ளிகள் கட்டாய கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் எச்சரிக்கை

கோபிச்செட்டிபாளையம், ஏப்.4-
தனியார் பள்ளிகளில் ஊரடங்கின்போது மாணவர்களின் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்தால் அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நகராட்சி சார்பில் புதிதாக செயல்படுத்தப்படும் நடமாடும் காய்கறி சந்தை வாகனங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதன்பின் பெல் நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக செயல்படுத்தப்பட உள்ள ராட்சத கிருமிநாசினி புகைகோக்கி இயத்தித்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் 90 சதவிகிதம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் ஊரடங்கின் போது மாணவர்களின் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுவது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றார்.