கோபி, ஜூன் 8- கோபிசெட்டிபாளையத்தில், வாரிய ஊழியர்களுக்கு உச்சநீதிமன் றம் அளித்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரம்ப வேண்டும் என்பது உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வாரிய ஊழியர்களுக்கு உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண் டும். அரசாணை 338-ஐ அமல்படுத்த வேண்டும். ஓப்பந்த பணியாளர்க ளுக்கு தமிழகம் முழுவதும் செட்யூல் ஆப்ரேட் படி ஒரே மாதிரியான ஊதி யத்தை வங்கி மூலம் வழங்கிடவேண் டும்.
பொருத்துனர் மின் பணியாளர்க ளுக்கு பிபி-505ஐ அமல்பத்திட வேண் ண்டும். பிபி-5 ன்படி குடிநீர்த் திட்டங்க ளில் போதுமான ஊழியர்களை நிய மித்து டியூட்டி சார்ட் அமல்படுத்திட வேண்டும். அனைத்து வாரிய அலுவல கங்களிலும் காலியாக உள்ள பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் எனக்கோரி ஈரோடு கோபி செட்டிபாளையத்திலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உப கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டசெயலாளர் எஸ்.சி.பிரகாசம், மாவட்ட நிர்வாகிகள் மற் றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஈரோடு பவானி, பெருந்துறை, காஞ்சிக்கோயில் உட் பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.