ஈரோடு, செப்.17- ஈரோடு வசந்தம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் துவக்கி வைத்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு இரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. வாடிக்கை யாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடி வமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப் டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது. தீபாவளி 2019 சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக கைத்தறி இரகங் களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலை யங்களிலும் செப்.15 ஆம் தேதி முதல் 30 சதவிகிதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய தூய பட்டு சேலைகள் மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள். உயர் இரக பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், லினன் சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் இரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்றுமதி இரகங்களான படுக்கை விரிப்பு கள், ஹோம், பர்னிசிங் இரகங்கள் மற்றும் குவில்ட் இர கங்களும் ஏற்றுமதி தரத்தில் அழகிய வடிவமைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வசந்தம் விற்பனை நிலையத்தின் மூலம் கடந்த ஆண்டு தீபாவளி ரு.2.15 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவ ளிக்கு ரு.2.50 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயக் கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறப்பு தள்ளுபடி விற் பனையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட உதவிட வேண்டும் என தெரிவித்தார். இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு இயக்கு நர் எஸ்.பி.ரமேஷ், ஆப்டெக்ஸ் மேலாளர் டி.நந்தகோபால் (வடிவமைப்பு /உற்பத்தி) உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.