ஈரோடு, ஜூலை 31- மத்திய அரசு அமைத்துள்ள ஐவர் குழுவினை கலைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள் ளியன்று வழக்கறிஞர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவியல் சட்டங்களில் திருத் தங்கள் செய்வதற்காக மத்திய உள் துறை அமைச்சகத்தால் அமைக்கப் பட்ட டாக்டர் ரன்பீர் சிங் தலைமை யிலான ஐவர் குழுவினை கலைத் திட வேண்டும்.
நான்கு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் நீதிமன்றங் களை உடனடியாக திறக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் ரத்தினசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற் பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற வாயில் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தின் தலைவர் நந்தகுமார் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அவிநாசி
அவிநாசி குற்றவியல் நடுவர் நீதி மன்றம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வழக்கறிஞர் வி.கே. சுப்பிரமணியன் தலைமை வகித் தார். வழக்கறிஞர்கள் ஆர்.பி.கனக ராஜ், என்.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.