கும்பகோணம், ஜூன் 26- அனைத்துக் கட்சி வழக்கறிஞர்கள் சார்பில் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக உறுப்பி னர்கள், பெரியார் வாழ்க என்று கூறியதை வரவேற்பதாகவும், ஆனால் இதற்கு புனிதம் கெட்டு விட்டதாக கூறி கங்கை நீரை கொண்டு நாடா ளுமன்றத்தில் தெளிக்க வேண்டும் என்று கூறியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் ஜெயபாண்டியன் சரவண பாண்டியன் நிம்மதி செல்வகுமார் சுமன் உள்ளிட்ட அனைத்து கட்சி வழக்கறிஞர்கள் கண்டன முழக்கமிட்டனர். தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட் சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளரிடம் அனைத்துக் கட்சி வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து மனு அளித்தனர்.