திருப்பூர், ஆக. 5 - வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஆலோ சனையுடன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து நீதிமன்றத்தைத் திறந்து செயல் படுத்த வலியுறுத்தி புதனன்று வழக்க றிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஆலோசனையுடன் நீதிமன்றத்தைத் தகுந்த பாதுகாப்புடன் செயல்படுத்த வேண் டும். கொரோனா கால ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு வங்கியில் வட்டியில்லா கடனாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா கால நிதி உதவிக்கு தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு தமிழக அரசு ரூ.50 கோடி நிதியை ஒதுக்கி வழங்க வேண்டும். மக்களை பாதிக்கும் புதிய சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் சார்பு நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.மோகன், வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் அ.மணவாளன், மாவட் டச் செயலாளர் எஸ்.பொன்ராம், மாவட்டத் துணைத் தலைவர் கே.சுப்பராயன், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாசேதுங், தேசியக் குழு உறுப்பினர் மு.ஆனந்தன், மாவட்ட செயலாளர் கோபால் சங்கர், மாவட்ட பொருளாளர் மணிவண்ணன், மாநில குழு உறுப்பினர்கள் ஜோதி குமார், ராமர், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருஞான சம்பந்தம் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.
நாமக்கல்
நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பால சுப்ரமணியன், சி.கோவிந்தராஜ், வி.பாபு, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சேகரன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழுக்கங்களை எழுப்பினர்.