நாகர்கோவில், ஆக.5- தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் முழுமையாக நீதிமன்றங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில் நாகர்கோ வில் மாவட்ட நீதிமன்றம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொது செயலாளர் பரமதாஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மரிய ஸ்டீபன், நிர்வாகிகள் அனந்த சேகர், புஷ்பதாஸ், பாலசுப்ரமணி யம், அனிட்டர் ஆல்வின், முன்னாள் வக்கீல் சங்க தலைவர்கள் வெற்றி வேல், உதயகுமார், வக்கீல் சங்க முன்னாள் தலைவர் பாலஜனாதி பதி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். பெல்வின் நன்றி கூறினார். மத்திய அரசு கொண்டு வர உள்ள குற்றவியல் சட்ட திருத்தத்தை தடுத்து அதற்கென ஏற்படுத்தப்பட்ட ஐவர் குழுவினை ரத்து செய்ய கேட்டும், சங்க செய லாளர் மற்றும் உறுப்பினர் மீதும் தான் தோன்றித் தனமாக எடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்தும் முழக்கமிட்டனர். இதில், வழக்கறி ஞர்கள் இளவரசு, அருள்மாறன், சகாயராஜ், அருள், சிவா, மற்றும் தக்கலை, இரணியல், குழித்துறை நீதிமன்றங்களைச் சார்ந்த வழக்க றிஞர்களும் கலந்து கொண்டனர்.