tamilnadu

img

பார் கவுன்சிலை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சிலின் வழக்கறிஞர் விரோத போக்கைகண்டித்து நாகர்கோவிலில் மாவட்டநீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கதலைவர் மரியஸ்டீபன் தலைமைவகித்தார். செயலாளர் டிகே. மகேஷ்,பொருளாளர் விஸ்வராஜன், துணைதலைவர் பிரதாப், ஜாக் கூட்டமைப்பு பொருளாளர் மகேஷ், முன்னாள் தலைவர்கள் வெற்றிவேல், உதயகுமார் உட்பட திரளாக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் குழித்துறை, தக்கலை, இரணியல், பூதப்பாண்டியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.