ஈரோடு
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளுள் ஒன்றான பவானி சாகர் அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த அணையின் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.7.2020 முதல் 28.10.2020 வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விவசாய, பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் கூறினார்.