ஈரோடு, ஆக.31- முறைசாரா சங்கங்களின் பதி வுகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று சிஐடியு தொழிற்சங் கத்தினர் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். முறைசாரா தொழிலாளர்க ளுக்கு கொரோனா கால நிவாரண நிதி வழங்க வேண்டும். டாஸ்மாக், போக்குவரத்து, குடிநீர், வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய 480 நாட்கள் பணி முடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் தொழிலா ளர் நல அலுவலகம் முன்பு சிஐடியு வினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தைத் தொ டர்ந்து தொழிலாளர் நல துணை ஆணையர் பாலதண்டாயுதபாணி தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடு பட்டார். அதில், மேற்கண்ட கோரிக் கைகளின் மேல் குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யப்படும் என உறுதி யளித்தார். இதனைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரம ணியன், மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம், மாவட்ட துணை தலைவர் கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் எஸ் சுப்ரமணியன், எச். ஸ்ரீராம், கே.மாரப்பன், பொன்.பாரதி, கே. கனகராஜ், எஸ். மாணிக்கம், பி. குணசேகரன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.