tamilnadu

காலியான சேர்கள் படம் பத்திரிகையில் வருவதால் தொண்டர்களை தரையில் அமர வைத்த அதிமுக

திண்டுக்கல், ஏப்.16-காலியான சேர்கள் குறித்த படம் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியாவதால் அதிமுக தொண்டர்கள் தரையில் உட்கார வைக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் ஞாயிறன்று பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். பொதுவாக திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டங்களில் காலியான சேர்களை செய்தியாளர்கள் படம் எடுத்து ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் போட்டு வந்தனர். முதல்வர் எடப்பாடி பொதுக்கூட்டத்திலும், ராமதாஸ் மற்றும் அமைச்சர் சீனிவாசன் கலந்த கூட்டங்களிலும் இது போன்றே காலியான சேர்களை படம் எடுத்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் நிகழ்ச்சியில் அப்படி செய்தி வெளியாகாமல் இருக்க சேர்களுக்கு பதில் தொண்டர்களை தரையில் அமர வைத்தனர். ஆனாலும் செய்தியாளர்கள் அதையும் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.