தருமபுரி, டிச. 29- தருமபுரி மாவட்டத்தில் மது விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்ட காவல்கண்காணிப் பாளர் ராஜன் உத்தரவின்பேரில், மாவட் டம் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பவர் களை கைது செய்ய போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது பாப்பாரப் பட்டி போலீசார் பாப்பாரப்பட்டி அடுத் துள்ள மோட்டாங்கள்ளி பகுதியில் மது விற் பனை செய்த பெரியசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல், பெரும்பாலை காவல் துறையினர் நடத்திய சோதனையில் கலப் பம்பாடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிட மிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய் யப்பட்டன. காரிமங்கலம் காவல் துறை யினர் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பார்வதி என்பவரை கைது செய்யப் பட்டு, 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள் ளனர்.