tamilnadu

img

தருமபுரி ஒன்றிய, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் சொந்த நிதியில் ஏரியை தூர்வாரும் பணி பொதுமக்கள் பாராட்டு

தருமபுரி, ஜூலை 22- தருமபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலா ளர்கள் மற்றும் ஊழியர்களின் சொந்த நிதியில் நல்லசேன அள்ளி ஊராட்சி  ஆவல் நாய்கன்பட்டி ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்றது. தருமபுரி ஊராட்சி  ஒன்றியம், நல்ல சேன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆவல் நாய்கன்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கரு வேலன்மரம் வளர்ந்து ஏரி முழுவதும் அடர்ந்து காணப்பட்டது. 2 ஏக்கர் பரப் பளவு கொண்ட இந்த ஏரியை தருமபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலு வலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சொந்த பங்களிப்பு நிதியாக ரூ.2 லட்சம் மதிப்பில் தூர்வார முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் திங்களன்று தூர்வாரும் பணி நடைபெற்றது. இப் பணியை பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.ரவிச்சந்திரன்,  எம்.மாதையன், ஊராட்சி செயலாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.சுருளிநாதன், முத்தையன், ரேவதி, கந்தப்பன், மனோகரன் மற்றும் ஊராக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இந்த ஏரியை தூர்வாரி பராமரிப்பதன் மூலம் 16 ஹெக்டர் விவசாய நிலத்திறக்கு பாசனநீர் கிடைக்கும். 20 பாசன கிணறு, 10 கைபம்பு, 10 மினி பவர்பம்பு, தனியார் விவ சாய கிணறு, 3 ஊராட்சி ஆழ்துளை கிணறு ஆகியவற்றுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். இதனையடுத்து ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டமும் உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சியும் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மழை நீர் சேக ரிப்பு, மரம் வளர்ப்பு, தண்ணீரை சிக்க னமாக பயன்படுத்துவது குறித்தும் விளக் கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சொந்த செலவில் ஏரியை தூர்வாரும் பணியை செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.