tamilnadu

img

நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பென்னாகரம், டிச. 5- தருமபுரி மாவட்டம், ஊட்டமலை அரசு  பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட அள விலான நீச்சல் போட்டியில் 46 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள னர்.  தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி களுக்கு இடையேயான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி கடந்த 30ஆம் தேதி தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தருமபுரி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் மூத்தோர் மேல், மூத்தோர் மற்றும் இளையோர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில் பென்னாகரம் அடுத்த ஒகே னக்கல் அருகே உள்ள ஊட்டமலை அரசுப்  பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 46 தங்கப்பதக்கம், 16 வெள்ளி பதக்கம், 3 வெண்கலம் உள்ளிட்ட பதக் கங்களை வென்றுசாதனை படைத்துள்ள னர். இதில் மூத்தோர் பிரிவில் ஐஸ் வர்யா, சாய்சங்கரி என்ற மாணவிகள் 5 தங்கப் பதக்கங்களையும், இளையோர்  பிரிவில் தினகரன் என்ற மாணவன் ஐந்து  தங்கப் பதக்கங்களையும் வென்றுள் ளனர். மேலும் நதியா, காமதேவி, சந்தியா, யோகராஜ், அருண், நாகராஜ், சிவ மணி, ஹரிஷ், ஸ்ரீகாந்த், தனுஷ், நாகேந் திரன்,  பிரதீப்,  மணிகண்டன், தீபக்ராஜ்,  லோகேஷ், தீபக் உள்ளிட்ட மாணவ-மாணவிகள் தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.  மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி யில் வெற்றி பெற்ற ஊட்ட மலை பள்ளி மாணவ, மாணவிகளில் 15 பேர் திருவண்ணாமலையில் நடைபெற விருக்கும் மாநில அளவிலான நீச்சல் போட் டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவி லான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரனுக்கும் பள்ளி தலைமை யாசிரியர் கோ.கோவிந்தன் மற்றும் சக  ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்த னர்.