தருமபுரி, ஆக.19- ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்தில், அனைத்து நிலையிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்.பெரிய ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்கவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும். நூறுநாள் திட்ட கணினி உதவியாளருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.ருத்ரையன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எம்.சுருளி நாதன், முன்னாள் மாவட்டத் தலைவர் என்.ராமஜெயம்,பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எம்.சிவப் பிரகாசம், வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.யோகராசு கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டதுணைத்தலைவர் இன்ப சேகரன் நன்றி கூறினார்.
சேலம்
இதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் ப.வாசு தேவன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ந.திருவ ரங்கன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இ.கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சி.முருக பெருமாள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் த.ஜான் ஆஸ்டின், ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணை தலைவர் சுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் க.கோவிந்தராஜி நன்றி கூறினார். இதில் நூற்றுக் கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கு.ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சு. இளங்கோ, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் மாவட்ட செய லாளர் த.இரா.பாலவிநாயகம், மாவட்ட இணை செயலாளர் த.ஷெ.சாதிக்பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்ட பொருளாளர் பா.லோக மணிகண்டன் நன்றி கூறினார்.