தருமபுரி, ஜூன் 13- வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்க வேண்டும் என அனைத்து கரும்பு விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் ஜமாபந்தி நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கலந்துகொண்டார். அப்போது அனைத்து கரும்பு விவ சாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் வறட்சி நிவாரணம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவா ரணம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, அரூர் சுப்பிரமணிய கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2018-2019 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் 491 ஏக்கர் வறட்சியினால் காய்ந்துவிட்டன. 2019-2010 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் பயிரிடப்பட்ட 700 ஏக்கர் கரும்பு பயிர் காய்ந்து விட்டன. ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளனர். வறட்சியினால் காய்ந்து போன கரும்பால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலை குழைந்துள்ளது. காய்ந்துபோன பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், பாதிக் கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் காப்பீடு நிறுவனத்திடமிருந்து நிவாரணமாக பெற்றுத்தரவேண்டும். அதேபோல் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடிய தென்னை, பாக்கு மரம் மற்றும் இதர பயிர்களான மஞ்சள் வாழை, சப்போட்டா, மா போன்ற பயிர்களும் வறட்சியினால் பாதிக்கப்பட் டுள்ளது. காய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும், பாக்கு மரத்துக்கு ரூ.3 ஆயிரமும், வாழை ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு, பருத்தி, மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு நிறு வனத்திடமிருந்து நிவாரணமும், காப்பீடு இல்லாத பயிர்களுக்கு அரசு நிவாரணமும் வழங்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செய லாளர் சி.வஞ்சி, மாவட்டகுழு உறுப்பினர் டி.சேகர், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் வெங்க டாச்சலம், பழனி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் தீர்த்தகிரி, வட்ட தலைவர் பொன்னுசாமி, மனோகரன், தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்க வட்ட தலைவர் சொக்கலிங்கம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர்கள் ராமலிங்கம், ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.