tamilnadu

நீரா பானம் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் மனு

ஈரோடு, ஆக.20- ஈரோடு பகுதிகளில் நீரா பானம் இறக்க அனுமதி கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள்  மனு அளித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக தென்னை மரத் திலிருந்து நீராபானம் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. நீராபானம் என்பதும் கள்ளு என்பதும் ஒரே மரத்தில் ஒரே பாளையில், ஒரே தன்மையில் எடுக்கக் கூடியது. ஆகவே கள்ளாக மாறாமல் இருக்க வேளாண்துறை அதிகாரிகள் எங்களுக்கு எந்த விதமான பயிற்சியும் கொடுக்கவில்லை. நாங்கள் நீராபானம் இறக்கும்போது  அது கள்ளாக மாறினால் நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும் நாங்கள் இதனை செய்து வருகிறோம். எனென்றால் இது விவசாயிகளுடைய வாழ்வாதார பிரச்சனை. ஆகவே, தமிழக விவசாயிகள் அனை வரும் நீராபானம் மற்றும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.  தமிழக அரசு கூட்டுறவு சொசைட்டிகளுக்கு மட்டும் நீராபானம் இறக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. நீராபானம் இறக்க அதற்கு தனியாக ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு சுமார் ரூ.2 கோடி வரை செலவு ஆகும். தோப்பிற்கு 15 மரம் என நீரா பானம் எடுத்து வருகிறோம். ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. நீராபானம் இறக்கும் பொழுது அது கள்ளாக மாறாமல் இருக்க குளிர்பான பெட்டியில் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அடுத்த நான்கு மணி நேரத்தில் கள்ளாக மாறி விடும். எனவே நீரா என்பது மிகவும் சத்தான குளிர்பானம் ஆகும். மேலும் இது விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்ததாகும்.  ஆகவே கேரளாவில் கள்ளுக்கும், நீராபானத் திற்கும் அனுமதி அளித்தது போல் தமிழக விவசாயி களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவ சாயிகள் மீது பொய் வழக்குப் போடுவது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை யினர் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இது தடுக் கப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சக்தி கணேஷிடம் நாராயணசாமி நாயுடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பாக செவ்வாயன்று மனு அளித்துள்ளனர்.