tamilnadu

img

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆவேச போராட்டம்

தருமபுரி, ஜூன் 1-சேலம்- சென்னை இடையிலான 8 வழிச் சாலை திட்ட தடையை எதிர்த்துமத்திய பாஜக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை கண்டித்து  சனியன்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம்- சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதீப்பிட்டில் எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து அதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் துவக்கினர். ஆனால், இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி நிலம்கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்புதெரிவித்து ஆங்காங்கே விவசாயிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும், இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்ற அடிப்படையில் விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாககையகப்படுத்தும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எட்டுவழி சாலை திட்டத்தின் பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்த தடை விதித்திருந்தது. இதனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சேலம்- சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையைஎதிர்த்து வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசுமேல்முறையீடு செய்தது. இந்த மனு திங்களன்று (நாளை) விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்தியபாஜக மோடி அரசின் இந்த மேல்முறையீட்டைக் கண்டித்து சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், மாநில அரசை கண்டித்தும் கண்டன முழுக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.இதன்ஒருபகுதியக தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாலகபாடியில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.பழனியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்தில் ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் வேலு, விவசாயிகள் அருள், தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்
இதேபோல், சேலம் மாவட்டம், நாளிக்கல்பட்டியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்திகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், எடப்பாடி அரசானது தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாட்டிலும் தேர்தல் முடிந்த பின்பு ஒரு நிலையில் உள்ளது. தேர்தலின் பொழுது 8 வழி சாலை திட்டம் வராது என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்தனர். ஆனால், தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதனால், விரக்தி அடைந்த மத்தியபாஜக அரசு தடையை நீக்கக் கோரி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் இந்த எட்டு வழி சாலை எங்கள் பகுதியில் அமைய விடமாட்டோம். எங்கள் உயிர் உள்ளவரை இந்த திட்டத்தை எதிர்த்து போராடுவோம்.நாங்களும் மேல்முறையீடு செய்வோம். மேலும், அனைத்து மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தனர்.