tamilnadu

img

தருமபுரியில் முற்போக்கு எழுத்தாளர் சங்க கலை இரவு விழா

தருமபுரி, ஜன. 26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர் கலை இரவு மக்கள் திருவிழா தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்டசெயலாளர் நவகவி தலைமை வகித்தார். கே.சி.கே. மார்க்ஸ் முன்னிலைவகித்தார். வரவேற்பு குழு தலைவர் மாவட்டகல்வி அலுவலர் ஓய்வு சி.ராஜசேகரன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் நாகைபாலு தொடக்கவு ரையாற்றினார்.  மகத்துவம் அனைத்தும் மாற்றத்தின் விளைச்சலே என்ற தலைப்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைச்செய லாளர் முனைவர் சுந்தரவள்ளி பேசினார். தகடூர் புத்தகபேரவை செயலாளர் மருத்துவர் இரா.செந்தில், இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதாரமேஷ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர்கள் ஆதி முதல்வன், ஆர்.வி.அரங்கநாதன், கூத்தப் பாடி பழணி, பூவிதழ்உமேஷ் ஆகியோர் கவிதை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறந்தப் படைப்பாளி களான நவகவி,இரவீந்திரபாரதி, மருத்து வர். ரா.செந்தில், ரா.சிசுபாலன்,நாகைபாலு ஆகியோரை பாராட்டி நினைவுபரிசு வழங் கப்பட்டது. மேலும், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் இசைப்போட்டியில் வாகைசூடிய மூக்குத்தி முருகனைப் பாராட்டி நினைவு பரி சுகளை வழங்கினர். மக்கள் பாடகர் கரிசல்குயில் கிருஷ்ண சாமி,பாரதிகுவின் பறையாட்டம்,மேட் டூர் வசந்தியின் பாடல்கள் முன்னணிகலைக் குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்க வட்டசெயலாளர் ம.கார்த்திகே யன் நன்றி கூறினார்.