தருமபுரி, அக்.4- பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 5 மாத நிலுவைத்தொகை யினை உடனே வழங்கக்கோரி பிஎஸ்என்எல்இயூ மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரியில் தொடர் தர்ணா போராட்டம் நடை பெற்றது. பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்்களுக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்காகததால் ஒப்பந்த ஊழியர்கள் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றது. எனவே ஒப்பந்த தொழிலாளர்களின் நலன் கருதி மாத சம்பளத்தை நிலுவையில்லாமல் உடனே வழங்கவேண்டும் என வலியுறுத்தி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல்இயூ மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரியில் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில உதவித்தலைவர் எம்.பாபு, ஒப்பந்த ஊழி யர் சங்க மாவட்ட உதவி தலைவர் பி.ஆர்.குமார் ஆகியோர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன், மாவட்ட உதவி செய லாளர் கே.பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் கே.பழனிசாமி, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பி. ஸ்ரீதரன், மாவட்ட செயலாளர் செளந்தரராஜன் பொருளாளர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.