தருமபுரி, செப். 24- தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரு மபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங் கம் பெ.சுப்பிரமணி ஆய்வு மேற் கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகவும், தற்போது நிலவும் சிதோஷண நிலை கார ணமாக பல்வேறு நோய் தாக்குத லுக்கு மக்கள் உள்ளாகி வருகின் றனர். குறிப்பாக டெங்கு, சிக்கன் குனியா, வைரஸ் காய்ச்சல்கள் ஆகியவற்றால் மக்கள் பாதிப் படைந்து வருகின்றனர். இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகி ஏராளமான பொதுமக்கள் அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இத்தகைய நிலை யில் உள்நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகளை தரையில் பாயில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற் றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவ சர சிகிச்சை பிரிவு, சிறப்புகாய்ச்சல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வார்டு களை பார்வையிட்டார். மேலும் நோயாளிகளிடம் சிகிச்சை அளிக் கும் விதம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் இளங்கோவிடம் சிகிச்சை அளிக் கும் விதம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கள் பி.மோகன், அன்பழகன் மற் றும் முனியப்பன், அடிலம் ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பழகன், திமுக தொண்டர் அணி நிர்வாகி எல்.டி.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.