புதுக்கோட்டை, டிச.10- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை ஆய்வு மேற்கொண்டார். குன்றாண்டார்கோவில் ஒன்றியம் உடையாளிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டுவதற்கான அடிக்கல்லை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை நாட்டினார். மேலும், உடையாளிப்பட்டியில் உள்ள நூலகம், பள்ளிக்கூடம், சாலை உள்ளிட்ட பணிகளையும் எம்.சின்னதுரை எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். நிகழ்வில் ஒன்றியக்குழுத் தலைவர் கே.என்.ஆர்.போஸ், திமுக ஒன்றியச் செய லாளர் சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.